* * *

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு

* * *

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு

* * *

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு

* * *

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

* * *

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

எத்தனை காலம் .....




அடிமைகள்

வானம் திறக்கட்டும் 
பூட்டப்பட்டே இருக்கிறது காற்று

சூரியனை கட்டவிழ்த்து விடு 
செக்கு மாடு போல் 
எத்தனை காலம் தான் அடிமையாய் 

நிலவும் சுருங்கி விரிந்து 
விலங்கினை உடைக்கப் போராட்டம் 

என்னைப் பொறுத்தவரை 
கைதிகளாய் அனைத்தும் 

நமக்கே தெரியவில்லை 
நாம் எல்லாம் உருவமற்ற ஒன்றின் 
அடிமைகள் என்று..............






விடுதலை வேண்டும் 


வாழ்வின் அர்த்தம் புரியாது 
பூ சொன்னது காம்பிடம் 
என்னும் ஏன் கால்களை 
இறுகப் பிடிக்கின்றாய் 
இளக்கி விடு 
விடுதலை வேண்டும்            என்று...........






"வாசற்படி" ஆசைகள் 

தேர் ஏறி பவனி செல்ல 
கால்களுக்கு ஆசை 
கிழிந்த செருப்புடன் -கால் 
தரை தொடும் போதும்.








விடுதலைப் போராட்டம் 

தரையமர்வு செய்ய வேண்டும் 
மீன்களின் விடுதலை குரல் 
இணைய மறுத்தோருக்கு 
மரண தண்டனை .




ஆக்கம்


றோ .பெ.றொஷான்

தமிழ் (சிறப்பு 3ம் வருடம்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites