வியாழன், 14 ஜூன், 2012

Economic Exam papers.



கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கை
கலைப்பீடம்
முதலாம் வருட கலைமாணி பரீட்சை 
(பொருளியல்)-2011
(முதலாம் பருவம்)

ECN 1101ஆரம்ப சிற்றினப் பொருளாதாரம்
அனுமதிக்கப்பட்ட நேரம்: இரண்டு(2) மணித்தியாலங்கள்
ஏதாவது நான்கு (4) வினாக்களுக்கு விடையளிக்குக.
கணிப்பாண் பயன்படுத்தப்பட முடியும். வரைபுத்தாள் வழங்கப்படும்.
1,
1)   பொருத்தமான வரைபடங்களினைப் பயன்படுத்தி கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்வுகளினதும் பொருளாதார விளைவுகளினை விளக்குக.

i)      பொருளாதாரமொன்று வாழைப்பழம் மற்றும் தக்காளிகளினை உற்பத்தி செய்கிறது. காரணி செறிவு விகிதமானது நிலையானது அல்ல.

ii)   மிகக் குறைந்தளவு மாம்பழங்களை உண்பதைவிட மிக அதிகமான மாம்பழங்களினை உண்பது மோசமானதாக இருக்கக்கூடும்.

iii) கம்பஹா மாவட்டத்தில் உள்ள தெங்கு தோட்ட நிலங்கள் வீடு கட்டுவதற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 


2)  சொக்லேட்டுகளினை நுகருகின்றபோதான மொத்தப் பயனானது 20 அலகுகள் ஆகவும் 5வது சொக்லேட்டினை உண்ணுகின்றபோதான எல்லைப்பயனானது -ஆகவும் காணப்படின் 5வது சொக்லேடடை நுகருகின்ற போதான மொத்தப்பயன் யாது?

3)   நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் வேலைசெய்யும் பேக்கரியாளனொருவன் கேக்கினை தயாரிப்பதற்கு 2மணித்தியாலங்களையும் பாண் ஒன்றினை தயாரிப்பதற்கு 30நிமிடங்களையும் செலவிடுவதாக கருதி அவனது உற்பத்தி சாத்திய வளையியினை வரைக. 
இவ் உற்பத்தி சாத்திய வளையியில் சாத்தியமான வினைத்திறனான உற்பத்திப் புள்ளிகளை குறிப்பிடுக.

2,கீழே தரப்பட்டுள்ள தகவல்களை கருத்திற்கொள்க:
PP
QD
QS
25
50
15
30
40
30
a   கேள்விச் சமன்பாட்டை பெருக.

b   நிரம்பல் சமன்பாட்டை பெருக.

c    இவ்விரு சமன்பாடுகளையும் பயன்படுத்தி சமனிலை விலை மற்றும் சமனிலை தொகை என்பவற்றினைக் காண்க.

d  வரைபுத்தாளொன்றில் கேள்வி மற்றும் நிரம்பல் வளையிகளினை வரைக. உ ற்பத்திப் பொருளொன்றின் மீது ரூபாஅலகுவரியாக விதிக்கப்படுமாயின் புதிய நிரம்பல் வளையியை வரைக.

e   புதிய சமனிலை விலை மற்றும் தொகை யாவை?

f     அரசாங்கத்திற்கான வரி வருமானம் எவ்வளவு ?

g   அலகுவரி விதிப்பினை அமுல்படுத்தியதன் காரணமாக இழக்கப்பட்ட நுகர்வோர் மிகையின் அளவு எவ்வளவு ?

3,
a   கீழ்வரும் நிகழ்வுகளின் பொருளாதார விளைவுகள் பற்றி கருத்துரைக்குக.

                    I. அரசாங்கம் அரிசியின் மீது கட்டுப்பாட்டு விலையினை அமுல்படுத்துகின்றது.

                   II.அரசாங்கம்  மண்ணெண்ணெய்க்கான மானியத்தினை வழங்குகின்றது.

                   III.அரசாங்கம் ஒரு பொதுப்பொருளாக விளையாட்டு மைதானமொன்றை வழங்குகின்றது.

b   இரண்டு உற்பத்தி பொருட்கள் தொடர்பிலான தகவல்கள் பின்வரமாறு தரப்பட்டுள்ளன.
       
A
பொருளின் விலை
A
பொருளுக்கான கேள்வித் தொகை
B
பொருளுக்கான கேள்வித் தொகை
வருமானம் 
8
100
60
1000
12
90
75
2000
                              I. பொருளிற்கான விலைசார் கேள்வி நெகிழ்சியினைக் கணிப்பிட்டு அது பற்றி கருத்துரைக்குக.

                             II. குறுக்கு கேள்வி நெகிழ்சியினைக் கணிப்பிட்டு அதுபற்றி கருத்துரைக்குக.

                             III. A பொருளுக்கான வருமானம்சார் கேள்வி நெகிழ்சியினை கணிப்பிட்டு அதுபற்றி கருத்துரைக்குக.
4,
a   தனிநபர் ஒருவரின் ஊழிய நிரம்பல் வளையியானது எந்நிபந்தனைகளின் கீழ் பின்னோக்கிய வளைவினைக் கொண்டிருக்கும்?

b   அரசாங்கம் குறைந்தபட்ச கூலியினை அமுல்படுத்துகின்றபோது ஏற்படக்கூடிய பொருளாதார விளைவுகள் யாவை?

c    ஊழியச்சந்தையில் கூலி வேறுபாட்டினை சமப்படுத்தல் மற்றும் பேதப்படுத்தல் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடு யாது?

d  சொக்லேட் உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரமொன்றின் செலவு ரூபா 1000000 அடுத்துவரும் வருடங்களில் ஒவ்வொரு வருடமும் 40000 அலகுகள் சொக்லேட்டிற்கு கேள்வியெழுப்பப்படுமமெனவும் இக்காலப்பகுதியில் ஒவ்வொரு சொக்லேட்டிற்கும் ரூபா 20 வீதம் விற்பனை செய்யப்படமுடியும் எனவும் கம்பனி மதிப்பிட்டுள்ளது. முழுக்காலப்பகுதியிலும் ஓரலகு சொக்லேட்டிற்கான உற்பத்திச் செலவு ரூபா 15 ஆகும். கழிவு வீதம் 5%உற்பத்தியாளன் இவ்சொக்லேட்டினை உற்பத்திசெய்யக்கூடிய இயந்திரத்தினை கொள்வனவுசெய்யவேண்டுமாஉமது தீர்மானத்தினை நீர் எவ்வாறு அடைந்தீர் என்பதை விளக்குக.

e   முயற்சியாளரொருவரினால் முகங்கொடுக்கக்கூடிய இடரினை குறைப்பதற்காக அரசாங்கத்தினால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் யாவை?

5,
a   மொத்த உற்பத்தி வளையியானது தலைகீழ்படுத்தப்பட்ட Uவடிவத்தினை எடுப்பது ஏன் என விளக்குக.

b   குறுங்காலத்தில் சராசரி மொத்த செலவுவளையியானது Uவடிவத்தினை எடுப்பது ஏன் என விளக்குக.

c    நீண்டகாலத்தில் சராசரி மொத்த செலவு வளையியானது Uவடிவத்தினை எடுப்பது ஏன் என விளக்குக.

d  கீழ்வரும் எண்ணக்கருக்களினை உதாரணங்களினைப் பயன்படுத்தி விளக்குக.
                  I.    உள்வாரி அளவுத்திட்ட சிக்கனம்
                 II. அளவுத்திட்ட சிக்கனமின்மை
6,
a   செலவு மற்றும் வருமான வரைபடங்களினைப் பயன்படுத்தி கீழ்வரும் நிகழ்வுகளினை நிறைபோட்டி சந்தையின் கீழ் காட்டுக.

                         I.நிறுவனங்கள் குறுங்காலத்தில் மாத்திரம் உற்பத்தியினை மேற்கொள்கின்றன.

                        II.நிறுவனங்கள் தொழிலுக்குள் உட்புகுகின்றன

b  .பின்வருவனவற்றை விபரித்துக் காட்டுக.
                       I. நிறுவனத்தின் கேள்வி வளையி
                      II,   தொழில் கேள்வி வளையி
                     III. நீண்டகாலத்தில் நிறுவனத்தின் நிரம்பல் வளையி
                      IV. குறுங்காலம் மற்றும் நீண்டகாலத்தில்               தொழிலின் நிரம்பல் வளையிகள்

7,
a   தனியுரிமை எப்போதும் வினைத்திறனின்மை மற்றும் சமூகநல இழப்பினை உருவாக்கும்’ கலந்துரையாடுக.

b   பின்வருவனற்றினால் கருதப்படுவது யாதென விளக்குக.
                     I.இயற்கை தனியுரிமை
                    II.தந்திரோபாய தனியுரிமை

c    தனியுரிமையாளர்கள் விளம்பரத்திற்காக செலவு செய்தாலும் அவர்கள் எப்போதும் அசாதரண இலாபத்தினையே உழைக்கின்றனர்’ இதற்கான காரணம் யாது?

d  அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற விற்பனை கோட்டா சந்தையின் நலன் மற்றும் வினைத்திறன் என்வற்றின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் யாது?

8,
பின்வருவனவற்றுள் ஏதாவது நான்கிற்கு (4) சிறுகுறிப்பு எழுதுக.
               I.     சந்தர்ப்பச் செலவு
              II.   ஒழுங்குபடுத்துபவர் என்றவகையில் அரசாங்கத்தின் பங்கு
             III.  பயன்
              IV.  இணைப்புப் பண்டங்கள்
            V.  தொழிற்சங்கங்கள் கூலிகளினை தீர்மானித்தல்
            VI.   வெளிவாரி அளவுத்திட்ட சிக்கனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites