திங்கள், 5 டிசம்பர், 2011

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க்கலைப் பட்டதாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கபொத. சாதாரணதர மாணவர்களுக்கான கருத்தரங்கு



கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க்கலைப் பட்டதாரிகள் சங்கத்தினுடைய கல்விச் செயற்திட்டங்கள் வெறுமனே கிளிநொச்சி முல்லைத்தீவு என்பதோடு நின்றுவிடாது அனைத்து மாவட்டங்களுக்குமான கல்விப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதன் வெளிப்பாடாக பதுளை பசறை மற்றும் நுவரெலியா போன்றவற்றை இணைத்துக்கொண்டு கா.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான இறுதிக் கருத்தரங்குகளை நடாத்துவது தொடர்பில் செயற்குழு உறுப்பினர்களால்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது இதற்கான வேண்டுகோளை மடுல்சீமைப் பங்குத்தந்தை அருட்திரு கிறிஸ்டி ஜோன் CMF அவர்கள் மேற்கொண்டிருந்தார்






மேற்படியொத்த செயலமர்வானது முல்லைத்தீவு   மாவட்டத்திலும் ஒரே சமகாலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டமையானது குறிப்பிடத்தக்கது. எனினும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியியல் நேரஅட்டவணைகள் மற்றும் குறிப்பிட்ட பாடசாலைகளில் பரீட்சைள் நிகழ்ந்து கொண்டிருந்தமை காரணமாக அனைத்துப் பாடசலைகளிலும் மேற்கொள்ளமுடியாமை தொடர்பில் மனவருத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் மேற்குறிப்பிட்ட பிரதேசப் பாடசாலைகளுக்கு செயலமர்வின் வினாப்பத்திரங்கள் கையேடுகள் போன்றன அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கா.பொ.த மாணவர்களுக்கான இறுதிக் கருத்தரங்கானது 2011.11.07ம் திகதி தொடக்கம் 2011.11.13ம் திகதிவரை பதுளை மாவட்டம் மடுல்சீமையில் மேற்கொள்ளப்பட்டது.மேற்படி கருத்தரங்கானது கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க்கலைப் பட்டதாரிகள் சங்கத்தினுடைய (TGA SOCIETY) ஏற்பாடடிலும் srm கல்வி நிறுவனத்தினது அனுசரணையிலும் மடுல்சீமைப் பங்குத்தந்தை அருட்திரு கிறிஸ்டி ஜோன் CMF அவர்களின் ஒழுங்குபடுத்தலின் ஊடாகவும் இக்கல்விச் செயலமர்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தினமும் காலை 07.30 மணியளவில் ஆரம்பிக்கும் கருத்தரங்குகள் மாலை 04.30 மணிவரை குறிப்பிட்ட பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டது.இதற்குத் தகுந்தாற்போன்று போக்குவரத்து சேவை, உணவு வசதிகள் மற்றும் மாலை மேலதிக கருத்தரந்குகளில் பங்கு கொள்வோருக்கான தங்குமிட வசதிகள் அனைத்தும் பங்குத்தந்தை அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.மாணவர்களுக்கான மேலதிக கருத்தரங்குகள் மாலை 06.00 மணி தொடக்கம் 09.00 மணிவரை பங்குப் பணிமனையில் இரு நிலையங்களாக்கப்பட்டு பாடசாலையில் தவறவிடப்பட்ட பாட அலகுகள் மாதிரி வினாக்கள் என்பன தெளிவுபடுத்தப்பட்டிருந்தன. 
    
      TIME
                  
                  SUBJECTS
08.00-10.45
                   Tamil
10.40-10.50
                   Tea Break
10.50-12.30
                   mathematics
12.30-12.50
                   Lunch Break
12.50-02.30
                   History
02.30-03.30
                   Science
03.30-04.30
                   English
04.30-09.00
                      Evening classes at Parish house
 பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூரணமான திருப்திகளை வளங்கியிருந்த இக்கருத்தரங்கு மீண்டும் ஓர் வாரத்திற்கு நீடிக்குமாறு கோரப்பட்ட நிலையிலும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியாண்டு ஆரம்பிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. 

our sollutions .............

• இனிவரும் காலங்களில் மூன்று மாதங்களுக்கொரு முறை கருத்தரங்குகளை நடாத்துதல்.

• பாடசாலைகளில் வாசிப்புத்திறனை அதிகரிக்கும் பொருட்டு நூலக விருத்திகளை மேற்கொள்ளுதல்

• பரீட்சை மாணவர்களுக்குத் தேவையான வினாப்பத்திரங்கள் மாதிரிப் ரீட்சை வினாக்கள் கையேடுகள் என்பன பிற மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு அனுப்புதல் போன்ற செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
கருத்தரங்குகளுக்கு அப்பால் உயர்தர மாணவர்களுக்கு கல்வியின் அவசியம், பரீட்சையை தோற்றும் போது எதிர்பார்க்கப்படுபவை பரீட்சை எய்திய பின்னதான வாழ்கை தொடர்பாக கருத்தரங்குகளும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் பங்குத்தந்தையினால் 2011.11.10 அன்று ஒழுங்குசெய்யப்படிருந்த பெற்ரோருக்கான விழிப்புணர்வுச் செயலர்விலும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை பல தலைப்புக்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

போயா விடுமுறை தினத்தில் பங்குமனையில் தங்கியிருந்து விழிப்புணர்வுச் செயலமர்வுகளில் ஈடுபடும் மாணவர்களின் செயற்பாடுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தமிழ்க்கலைப் பட்டதாரிகள் சங்கத்தினுடைய (TGA SOCIETY) ஏற்பாடடிலும் SRM கல்வி நிறுவனத்தினது அனுசரணையிலும் மடுல்சீமைப் பங்குத்தந்தை அருட்திரு கிறிஸ்டி ஜோன் CMF அவர்களின் ஒழுங்குபடுத்தலின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட இக் கருத்தரங்கானது சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டதுடன் பூரணமான வெளியீடுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் வெற்
றிக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சிறப்பாக பங்குத்தந்தையர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகள் அன்புகளுடன்….

 

1 கருத்து:

  1. Casino & Hotel Reno (SV) - Mapyro
    The casino at the Casino of South Reno is 태백 출장샵 an upscale hotel and 강원도 출장안마 casino located in the heart of the 상주 출장마사지 Fremont Street Experience. It is owned by the Caesars  Rating: 8.5/10 · 상주 출장샵 ‎8,934 전주 출장마사지 votes

    பதிலளிநீக்கு

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites