* * *

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு

* * *

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு

* * *

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு

* * *

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

* * *

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்

புதன், 11 ஏப்ரல், 2012

மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியில் சகபாடிகளின் பங்களிப்பு





“நவில்தொறும் நூனயம் போலும் பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு”

இது ஐயன் வள்ளுவன் சொன்ன வாய்மொழி. படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலினைப் போல பழகப் பழக எம் மனதிற்கும் வாழ்விற்கும் இன்பம் தரவல்லது நட்பு.

“உன் நண்பனைப் பற்றிச் சொல்
நான் உன்னைப் பற்றிச் சொல்லுவேன்” 

என்பதும் எல்லோராலும் பெரும்பாலும் கூறப்படுகின்ற கூற்றுத்தான். இந்த மண்ணில் பிறந்த மனிதரில் எதிரிகள் இல்லாமல் யாரும் மடிந்திருக்கலாம் ஆனால் நண்பன் இல்லாமல் யாரும் வாழ்ந்தார்களா? என்பது வியப்புக்குரிய வினாவாகத்தான் அமைந்து விடுகின்றது.




செவ்வாய், 10 ஏப்ரல், 2012

"பஞ்ச்" தத்துவம்





1) பீடியால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே லேடியால் சுட்ட மனம்.
2) நாம் நோக்கும் பெண் நம்மை நோக்காவிடில், Nokia வாங்கி என்ன பயன் .


Political Science Exam papers





கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை

கலைப்பீடம்

முதலாம் வருடக் கலைமாணிப் பரீட்சை 2011-2012

முதலாம் பருவம்

Psc 1101-அரசியல் விஞ்ஞானம்ஓர் அறிமுகம்




இரண்டு மணித்தியாலங்கள்
ஏதேனும் முன்று(03) வினாக்களுக்கு மட்டும் விடையளிக்குக.
ஓவ்வொரு வினாவுக்கும் 20 புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.

01. அரசியல் விஞ்ஞான ஆய்வின் பரிணாம வளர்ச்சியை அதன் பிரதான திருப்பமுனைகளுடன் தொடர்புபடுத்திப் பரீட்சிக்குக.

02.a) “அதிகாரம்”; என்ற எண்ணக்கரு பற்றி நீர் விளங்கிக்கொள்வது யாது?
b) “அதிகாரம”; பற்றிய கல்வியில் இரண்டு அரசியல் விஞ்ஞான கோட்பாட்டு அணுகுமுறைகளை விபரிக்குக.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites