செவ்வாய், 10 ஏப்ரல், 2012

Political Science Exam papers





கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை

கலைப்பீடம்

முதலாம் வருடக் கலைமாணிப் பரீட்சை 2011-2012

முதலாம் பருவம்

Psc 1101-அரசியல் விஞ்ஞானம்ஓர் அறிமுகம்




இரண்டு மணித்தியாலங்கள்
ஏதேனும் முன்று(03) வினாக்களுக்கு மட்டும் விடையளிக்குக.
ஓவ்வொரு வினாவுக்கும் 20 புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.

01. அரசியல் விஞ்ஞான ஆய்வின் பரிணாம வளர்ச்சியை அதன் பிரதான திருப்பமுனைகளுடன் தொடர்புபடுத்திப் பரீட்சிக்குக.

02.a) “அதிகாரம்”; என்ற எண்ணக்கரு பற்றி நீர் விளங்கிக்கொள்வது யாது?
b) “அதிகாரம”; பற்றிய கல்வியில் இரண்டு அரசியல் விஞ்ஞான கோட்பாட்டு அணுகுமுறைகளை விபரிக்குக.



03.ஒன்றில்
1. a) பேரின மற்றும் b)சிற்றின மட்டங்களில் எவ்வாறு அரசியல் செயற்படுகிறது என்பதை காட்டுக. 

அல்லது

2. “அரசு என்பது ஓரு சோதனைவழி யதார்த்தம் அல்ல ஆனால் அது ஒரு சமுக அரசியல் யதார்த்தமாகும்” இந்த கருத்தை உதாரணத்துடன் விளக்குக.

04. ஒன்றில்
1. a)அரசு என்ற எண்ணக்கருவை வரையறைசெய்து b)அரசின் பிரதான வடிவங்களை சுருக்கமாக விளக்குக.

அல்லது 

2.பின்வரும் நவீன அரசுக்கு முந்திய கோட்பாடுகளை ஒப்பிட்டு வேறுபடுத்துக.
a)மானிய அரசு b)கீழைத்தேச வல்லாட்சி c)கலக்சீய அரசு(Galactic state)

05. ஒன்றில் 

1. நீர் கற்றறிந்த அரசியல் கோட்பாடுகளுடன் தொடர்புபடுத்தி பின்வரும் இரண்டு எண்ணக்கருக்களை விளக்குக.
a)அரசியல் அடிபணிவு b) இணக்கம்

அல்லது 

2. தேசம் மற்றும் தேசியவாதம் பற்றிய கற்கைகளுக்கான
1)ஆதிகால 2) நவீனத்துவ மற்றும் 
3)உபகரணவியலாளர் அணுகுமுறைகளை(Galactic state) விளக்குக.

06. பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் முன்று (03) பற்றி குறிப்புகள் எழுதுக.
1) பிரஜாவுரிமை
2) நவீன தராண்மை வாதம்
3) ஓர் அரசியல் நிகழ்வாக தேசியவாதம்;
4) ஓர் கற்பனை சமுதாயமாக தேசம்
5) அரசு பற்றிய அணுகுமுறையில மாக்சிச மற்றும் தாரண்மைவாத கருத்துக்களுக் கிடையிலான பிரதான வேறுபாடுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites