* * *

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு

* * *

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு

* * *

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு

* * *

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

* * *

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுக்கொள்கைகள்

e


உலக நாடுகளைப் பொறுத்த வரையில் பொதுக் கொள்கை என்பது முக்கிய ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது. பொதுக்கொள்கை என்பது மக்களினுடைய பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் முயற்சியாகும். ஒரு நாட்டின் அரசாங்கத்தினுடைய சட்ட நியதிகள், திட்டங்கள், தீர்மானங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் என்பன பொதுக் கொள்கையினை விருத்தி செய்யும் முக்கிய விடயங்களாக காணப்படுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இந்த பொதுக் கொள்கையானது பொதுத்துறை நிர்வாகத்தின் முக்கியமான ஒரு ஆய்வாக காணப்படுகின்றது. பொதுக்கொள்கையானது அரசாங்கத்தினால் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயன்முறையாகும். இக்கற்கை நெறியானது 1972ல் சார்ளஸ் மரியன் (Charles merrian) என்ற அரசியல் விஞ்ஞானி அரசியல் கோட்பாடுகளுக்கு இடையிலான யதார்த்தத்தை கட்டியெழுப்புவதனூடாக தோற்றம் பெற்றது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கா.பொ.த. உ/த முன்னோடிக் கருத்தரங்கு துணுக்காய் 2011...



அந்த நாட்களில் முழு இலங்கையே தேர்தலுக்காகக் காத்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டமும் நீடியவருடங்களுக்குப்பின்னரான தேர்தலொன்றுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்குதான் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடமானது கா.பொ.. /த மாணவர்களுக்கான இறுதிக் கருத்தரங்கினை முல்லைத்தீவு துணுக்காய்க் கல்வி வலயத்தினில் வெற்றிகரமாக மேற்கொண்டு திரும்பியிருக்கின்றது.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

க.பொ.த சா/த முன்னோடிக் கருத்தரங்கு துணுக்காய் 2010.



ஒவ்வொரு மனித உயிர்களினதும் அடிப்படை உரிமையாகக் கல்வி காணப்படுகின்றது. ஆனால் பல சிறார்களுக்கு இவ் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாது பறிக்கவும்படுகின்றது.  இன்னும் சில நாடுகளில் அரசியல் இழுபறிகள், உள்நாட்டு குழப்பங்கள், சுயநலம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் போன்றவற்றாலும் இவ் அடிப்படைக் கல்வியானது  இன்று பல்வேறுப்பட்ட சவால்களை எதிர்நோக்கி நிற்கின்றது.

வியாழன், 1 செப்டம்பர், 2011

சிரிக்க... சிந்திக்க....


1. அப்பா:-ஏண்டா.. ம்ம ம்மா தானே அடிச்சாங்க அதுக்குப் போயி இப்படி அழுவுறே?”
  மகன் :- போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் ன்னால அடிய தாங்‌‌கிக்க முடியாது.
 ****************************************************
                                                                              
2.ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம் பக்கத்து டேபிள்ள வச்சிட்டு நீ வந்து இங்க உட்கார்ந்திருக்க?
மாணவன் :நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளி வைக்கணும்னு சொன்னீங்க?
 ***************************************************   

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites