வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கா.பொ.த. உ/த முன்னோடிக் கருத்தரங்கு துணுக்காய் 2011...



அந்த நாட்களில் முழு இலங்கையே தேர்தலுக்காகக் காத்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டமும் நீடியவருடங்களுக்குப்பின்னரான தேர்தலொன்றுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்குதான் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடமானது கா.பொ.. /த மாணவர்களுக்கான இறுதிக் கருத்தரங்கினை முல்லைத்தீவு துணுக்காய்க் கல்வி வலயத்தினில் வெற்றிகரமாக மேற்கொண்டு திரும்பியிருக்கின்றது.
கருத்தரங்கானது 11.07.2011 தொடக்கம் 15.07.2011 வரையாக 150 மாணவர்களையும் 09 பாடசாலைகளையும் உள்ளடக்கியதாக ஒட்டு சுட்டான் மகாவித்தியாலயம் மற்றும் மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய இரு நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.இதில் பல்கலைக்கழக மாணவர்கள் 18 பேர் இணைந்து தமிழ், வரலாறு, பொருளியல், புவியியல், இந்துநாகரிகம், கிறீஸ்தவநாகரிகம், பொதுஅறிவு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன.இது போன்றதொரு கருத்தரங்கானது கடந்தவருடமும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00மணி வரையான கருத்தரங்குகள் நாளுக்கு நாள் மாணவர்அதிகரிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.தகுந்தாற்போன்று மாலைவகுப்புக்களும் ஒழுங்குசெய்யப்பட்டது. அனைத்துவிதமான ஒத்துழைப்புக்களையும் கல்விவலயம், பாடசாலைச் சமூகங்கள் ஏற்படுத்திக்கொடுத்திருந்தன.
பரீட்சைநாளுக்காய் பயந்திருந்த  ஓர்  உறவுடன் சற்றுக்கதைகொடுத்தோம்; “அண்ணா எங்களுக்கு ஒழுங்காக சிலபஸ் முடிக்கல்ல அதுக்குள்ள EXAM வந்திட்டுது என்று ஆரம்பித்த கதை வரிசைகளில் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு சென்றது இங்க எல்லாப்பாடத்துக்கும் ஆசிரியர்மார் இல்லை. இல்லையெண்டுசொல்லிக் கொண்டு வேறுபாடசாலைக்குசெல்லமுடியாத நிலை ஓரிரு  பாடங்களுக்காகவேனும் இங்கேயே இருக்கிறம்.

சற்றுத்தொனியாக இன்னுமொரு குரல்..இங்க படிப்பிக்க வாறவயளெல்லாம் யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேந்தவையள் திங்கள்கிழமைகளில் பிந்தி வருவது வெள்ளிக்கிழமைகளில் அரைவாசியுடன் சென்றுவிடுவதும் போயாதினங்கள் விடுமுறைநாட்கள் வாரஇடையே வருமானால் அக்கிழமை முழுவதுமே நிர்க்கதியாகிவிடுமென்று முடித்தார்.
இப்பிரதேசம் சாராத மாணவர்களும் பிற மாவட்ட உறவினர்கள் வசதிகொண்ட மாணவர்களும் இறுதிக்கருந்தரங்குகளுக்காக யாழ்ப்பாணம், வவுனியாவென்று சென்றுவிட்னர். தனிமைப்படுத்தப்பட்டது நாம் மட்டும்தான். பள்ளியில் படிப்பது மட்டும் தான். எதுவித வகுப்புக்களோ கருத்தரங்குகளோ கையேடுகளேனும் கிடைப்பதென்பதில் கஸ்டம்தான்.
இது இவ்வாறிருக்க இன்னுமோர் மாதத்தில் பரீட்சையை முடித்துவிட்டு என்னசெய்வதென்ற ஏக்கமும் தயக்கமும் கொண்டு.. எங்களைப்போன்றவர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னாரெல்லாம்  வெவ்வேறு படிப்புக்களைத் தொடங்கி விடுவார்கள் எங்களுக்கு அவ்வாறானதோர் வாய்ப்புக்கள் எதுவுமே இல்லையென்று முடிக்க  "ஏன் முகாமால வந்தபோது தையல் மிசினெல்லாம் தந்ததுதானே" என்றொரு குரல். அமர்க்களத்துடன் சிரிப்பொலி……  தண்ணி இறைக்க வாட்டர்பம்...எம்மில் சிலர் சிரிக்க மறுத்து சிந்திப்பதுபோல காட்சி..
(இக் கல்வி வலயத்தில் 2010 G.C.E O/L பரீட்சைக்கு தோற்றிய 717 மாணவர்களில் 214 மாணவர் சித்தியடைந்தமையும் முறையே ஆங்கிலம்-673, விஞ்ஞானம்-478, கணிதம்-391, வரலாறு-353 எண்ணிக்கையான மாணவர்கள் சித்தியடையாமையும் குறிப்பிடத்தக்கது )



கொழும்பிலும் ஹோட்டல்களிலும் தங்கியிருந்துவிட்டு தேர்தல் காலங்களில் கோரிக்கைகளை கேட்டுவரச் செல்வோர்  போல நம்மையும் எண்ணியோ அன்றேல் உறவுகளென்று எண்ணியோ கோரிக்கைகள் சில முன்வைக்கப்பட்டன.

ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவேண்டும்
உயர்தர வகுப்புக் கருத்தரங்குகள் 12ம் தரத்திலிருந்தே மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
உயர்தரத்திற்கான அனைத்துப் பிரிவுகளும் (கலை,வர்த்தகம்,விஞ்ஞானம்) ரம்பிக்கப்படவேண்டும்
பாடசாலை வளப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவேண்டும்.
அரச,தனியார் கல்விமற்றும் தொழில்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படவேண்டும்.

வாழ்கையைத் தீர்மானிக்கும் இக்கல்வியில் அரசியல் இலாபத்தையும் ஏமாற்றல் வித்தைகளையும் விளையாட்டுக்களையும் மேற்கொள்ளும் மனிதர்கள் பலர்.இது உங்களுக்கான நேரமல்ல அவர்களின் வாழ்கை. நாம் காணமுடியாத எதிர்கால சந்ததியினர். தேசியவாதிகளது பணிகளும் தேசியம் பேசுவோரது பார்வையும் வெறுமனே தத்தமது தேர்தல் மாவட் ங்களுன்  நின்றுவிக்கூடாது.வாக்காளர்களுக்கு வலைவீசும் உங்கள் முயற்சிகளான வீதி புனரமைப்பு, கோயில் கட்டுதல், குளங்கள் அமைப்பதோடு முடக்கிக்கொண்டு வாக்களிக்க வயதற்றோர்களின்  (மாணவர்கள்)நிகழ்கால மற்றும் எதிர்காலத்திட்டங்களையும் கருத்திற்கொள்ளுங்கள்.பள்ளிப்படிப்பு முடித்தவுடனேயே தையல் பயிற்சிகளையும் நீர்பம்பிகளையும் வழங்குவோரது குள்ளத்தன அரசியலை நிறுத்துங்கள்.வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கல்விநிலையங்களை இப்பிரதேசங்களில் அறிமுகம் செய்துவையுங்கள்.

கல்வியால் சில சமூகங்கள் புரட்சியையும் வளர்சியையும் கண்டுகொண்டிருக்க அழிவை ஏற்படுத்தும் அந்தக் கொடிய போராட்டங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி வீரப்பேச்சுபேசி உங்கள் அரசியலிலும் தனிப்பட்ட உயர்வுகள் , பதவிகளில் காய்நகர்தல்களை மேற்கொள்ளும் என் இனிய உறவுகளே உங்களிடம் தாழ்மையாய் ஒர் விண்ணப்பம்இனியும் அவர்களை ஏமாற்ற வேண்டாம் ஏணியாய் யாமாகி ஏற்றிடுவோம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites