கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கை
கலைப்பீடம்
முதலாம் வருட கலைமாணி பரீட்சை
(பொருளியல்)-2011
(முதலாம் பருவம்)
ECN 1101: ஆரம்ப சிற்றினப் பொருளாதாரம்
அனுமதிக்கப்பட்ட நேரம்: இரண்டு(2) மணித்தியாலங்கள்
ஏதாவது நான்கு (4) வினாக்களுக்கு விடையளிக்குக.
கணிப்பாண் பயன்படுத்தப்பட முடியும். வரைபுத்தாள் வழங்கப்படும்.
1,
1) பொருத்தமான வரைபடங்களினைப் பயன்படுத்தி கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்வுகளினதும் பொருளாதார விளைவுகளினை விளக்குக.
i) பொருளாதாரமொன்று வாழைப்பழம் மற்றும் தக்காளிகளினை உற்பத்தி செய்கிறது. காரணி செறிவு விகிதமானது நிலையானது அல்ல.
ii) மிகக் குறைந்தளவு மாம்பழங்களை உண்பதைவிட மிக அதிகமான மாம்பழங்களினை உண்பது மோசமானதாக இருக்கக்கூடும்.
iii) கம்பஹா மாவட்டத்தில் உள்ள தெங்கு தோட்ட நிலங்கள் வீடு கட்டுவதற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளன.