In a democratic country commonly, it is believed that politicians elected by people are bound to ensure the well-being of public masses. We know that Sri Lanka is identified as a democratic nation in the world. And also in our country too we can see democratic procedure of electing political leaders to represent parliament. The parliament is the place where the law that how the country public should be ruled is made.
வெள்ளி, 21 அக்டோபர், 2011
புதன், 19 அக்டோபர், 2011
Political Science Exam Papers,
கொழும்புப் பல்கலைக்கழகம் இலங்கை
கலைப்பீடம்
மூன்றாம் வருடக் கலைமாணிப் பரீட்சை பருவம் - 2, 2011
3252- ஒப்பீட்டு நோக்கிலான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகம்
இரண்டு (02) மணித்தியாலங்கள்
ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.
01. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் உள்நாட்டு பொருளாதாரத்தில்பூகோளமயமாக்கல் செயன் முறையானது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆராய்க.
02.பொதுக்கொள்கை மற்றும் பொதுத்துறை நிர்வாகம் என்பன அரச - மைய அபிவிருத்தி மற்றும் நலன்புரி அரசு என்பவற்றில் இருந்து குறைந்து செல்லும் நலன்புரி அரசை நோக்கி மாற்றமடைந்துள்ளன என நீர் கருதுகிறீரா? உமது விடையை உறுதிப்படுத்துக.
Sociology Exam Papers,
கொழும்புப் பல்கலைக்கழகம் இலங்கை
கலைப்பீடம்
முதலாம் வருடக் கலைமாணிப் பரீட்சை பருவம் - 2, 2011
SOC - 1202 உளவியல் தத்துவங்கள்
இரண்டு (02) மணித்தியாலங்கள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை தருக. ஒவ்வொரு வினாவிற்கும் சமமான புள்ளிகள் வழங்கப்படும்
01. மனித நடத்தையினைக் கற்பதில் சமூகவியலுக்கம் உளவியலுக்கும் இடையேயான வேறுபாடுகள் எவை?
02.நடத்தையினைக் கற்பதில் பண்பாட்டினைக் கருத்தில் கொள்வது ஏன் அவசியமானது விளக்குக?
International Relations Exam Papers,

கொழும்புப் பல்கலைக்கழகம் இலங்கை
கலைப்பீடம்
முதலாம் வருடக் கலைமாணிப் பரீட்சை பருவம் - 2, 2011
INR - 1204- சர்வதேச உறவுகளின் நடைமுறை
இரண்டு (02) மணித்தியாலங்கள்
நான்கு (04) வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
01. போரின் இடைக்காலத்தில் (1918 - 1939) சர்வதேச அரசியல் முறைமையில் காணப்பட்ட முனைப்பான அம்சங்கள் யாவை?
02. 1945 - 1970 காலத்தில் வல்லரசுக்கிடையிலான இடைத்தொடர்புகளின் (Interactions) இயல்புகளைப் பரிசீலிக்குக?
திங்கள், 17 அக்டோபர், 2011
Political Science Exam Papers
கொழும்புப் பல்கலைக் கழகம் - இலங்கை
கலைப்பீடம்
கலைமாணி மூன்றாம் வருடப் பரீட்சை (பருவம் 2) - 2011
PSC 3263 ஒப்பீட்டு நோக்கிலான அரசியல் நிறுவனங்கள்.
இரண்டு மணித்தியாலங்கள்.
ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்குக.
ஒன்றில்...
01. நவீனமாதல் மற்றும் அரசியல் நவீனமாதல் கோட்பாடுகளை விளக்குக.
அல்லது.
நவீன அரசுகளில் அரசியல் நவீனமயமாதலின் பண்புகளையும் பிரச்சினைகளையும் கலந்துரையாடுக
02. விளக்குக.
1. அரசியல் முறைமை மற்றும்
2. அரசியல் முறைமையின் பிரதான செயற்பாடுகள்.
Sociology Exam Papers
கொழும்புப் பல்கலைக்கழகம் - இலங்கை
மூன்றாம்வருடக்கலைமாணிப் பரீட்சை -2011
3246 சமகாலச் சமூகவிவகாரங்கள்
நேரம் 02 மணித்தியாலம்
முன்று(03)வினாக்களுக்கு விடை தருக.
1.சமூகவியல் அணுகுமுறையின் மூலமாகச் சமூகவிவகாரங்களைக் கற்பதன் முக்கியத்துவத்தினை உதாரணங்களோடு பரிசீலிக்குக.
2.பொருத்தமான கோட்பாட்டு அணுகுமுறைகளோடு தொடர்புபடுத்தி வறுமைக்கான காரணங்களை விமர்சனரீதியாகப் பரிசீலிக்குக.
வெள்ளி, 14 அக்டோபர், 2011
கலைப் பட்டதாரிகள் அமைப்பின் 2011கான நிர்வாக உறுப்பினர்கள்
புதன், 12 அக்டோபர், 2011
புதிய தலைமைகளை வாழ்த்தி மகிழ்கின்றோம் ......
கொழும்புப் பல்கலைக்கழகமானது தனியே கல்விச் செயற்பாடுகளுடன் நின்றுவிடாமல் சமூகத்தில் பல பணிகளையும் மேற்கொண்டுவருகின்றது. சமூகப் பணிகள் அனைத்துப்பீட தமிழ் மாணவர்களினால் இரு பெரும் பல்கலைக்கழக அமைப்புக்களான
- கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம்
- கொழும்புப் பல்கலைக்கழக இந்து மன்றம்
என்பன வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த கல்வியாண்டில் நிறைவான பணிகளை ஆற்றிய இச் சங்கங்களின் தலைமை மற்றும் உறுப்பினர்களின் செயற்பாடுகள் புதிய சங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நிகழ்ந்திருந்தது. இந்து மன்றத்தினுடைய தலைவியாக கலைப்பீட மாணவி பார்கவி காந்திநாதன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார் உறுப்பினர்களாக கமலரூபன், கலைச்செல்வி ஆகியோரும், மற்றும் தமிழ் சங்கத்தினுடைய செயலாளராக மேகலா கமலேஸ்வரனும் சங்க உறுப்பினர்களாக ஐஸ்வர்யலட்சுமிதேவி, துஷானி ஆகியோரும் கலைப்பீடத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களாவர்.
பல எதிர்பர்ப்புக்களைச் சுமந்துள்ள சமூகத்தில் இவர்களின் பணி நிறைவானதாக அமையவும் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் செயற்பாடுகள் சிறந்தோங்கவும் தமிழ்க் கலைப்பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் இவர்களை வாழ்த்தி நிற்கின்றோம்.
International Relations Exam Papers
கொழும்புப் பல்கலைக்கழகம்,இலங்கை
கலைப் பீடம்
வருடக் கலைமாணிப்பரீட்சை, பருவம் ॥ -2011
INR 3267 - இலங்கையின் வெளிநாட்டு கொள்கை : 1977 இன் பின்னர்
இரண்டு (02) மணித்தியாலங்கள்
முதலாம் வினாவுக்கும் ஏனையவற்றுள் இரண்டு (02) வினாக்களுக்கும் விடைதருக.
1 .வெளிநாட்டுக் கொள்கையின் கோட்பாடு மாதிரிகள், வரையறைகள் மற்றும் எண்ணக்கருக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி 1977 இன் பின்னர் இலங்கையின் ஏதேனும் இரண்டு அம்சங்களின் வெளிநாட்டுக் கொள்கை நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்க.
பிரபல நூல்களும் அதன்ஆசிரியர்களும்
வியாழன், 6 அக்டோபர், 2011
Geography Exam Papers
பொதுக்கலைமாணிப் பரீட்சை (புவியியல்)
இரண்டாம் அரையாண்டுப் பருவப் பரீட்சை 2011
GYG -3243 அபிவிருத்தியில் பிரதேசப்பாங்குகள்
நேரம் 02 மணித்தியாலம்
ஒவ்வொரு பகுதியிலும் குறைந்த பட்சம் ஒரு வினாவையேனும் தெரிவு செய்து செய்து எல்லாமாக முன்று(03)வினாக்களுக்கு விடை தருக.
இரண்டு உலக புற உருவப்படங்கள் மற்றும் பிறேசில் நெதர்லாந்துப் படங்கள் வழங்கப்படும்.
பகுதி 01
(01) “தற்பொழுது பிறேசிலின் பொருளாதாரம் பாரிய உலகப் பொருளாதாரத்தில் 7வது இடத்தை வகிக்கின்றது.வெளிநாட்டு நேரடி முதலீடுகளே இதில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாகும்” இக்கூற்றினை நுணகிப் பரிசீலிக்குக.
(20 புள்ளிகள்)
புதன், 5 அக்டோபர், 2011
க.பொ.த. சா.த செயலமர்வு 2011....
உறவுகளே வணக்கம் !
எங்களது வரலாற்று முயற்சிகளில் மீண்டும் ஓர் முயற்சியாக எம்மால் முன்னெடுக்கப்படும் க.பொ.த. சா.த செயலமர்வினை இம்முறை இருபிரதேசங்களுக்கு கார்த்திகை மாத முற்பகுதியில் விஸ்தரிக்க உத்தேசித்துள்ளோம்.
1. பதுளை (மடுல்சீமை )
2. முல்லைத்தீவு ( முள்ளியவளை)
எனவே எமது இவ் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளுக்கு உங்களது பூரண ஒத்துழைப்பினை எதிர்பரர்த்து நிற்பதோடு உங்களால் இயன்ற
வினாப்பத்திரங்கள், குறிப்புக்கள் என்பவற்றைத் தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம்.
லேபிள்கள்:
Faculty Announcement.,
faculty plans
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)