புதன், 12 அக்டோபர், 2011

புதிய தலைமைகளை வாழ்த்தி மகிழ்கின்றோம் ......

கொழும்புப் பல்கலைக்கழகமானது தனியே கல்விச் செயற்பாடுகளுடன் நின்றுவிடாமல் சமூகத்தில் பல பணிகளையும் மேற்கொண்டுவருகின்றது. சமூகப் பணிகள்  அனைத்துப்பீட தமிழ் மாணவர்களினால் இரு பெரும் பல்கலைக்கழக அமைப்புக்களான
  •   கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம்  
  •  கொழும்புப் பல்கலைக்கழக இந்து மன்றம்

      என்பன வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

கடந்த கல்வியாண்டில் நிறைவான பணிகளை ஆற்றிய இச் சங்கங்களின் தலைமை மற்றும் உறுப்பினர்களின் செயற்பாடுகள் புதிய சங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் நிகழ்ந்திருந்தது. இந்து மன்றத்தினுடைய தலைவியாக கலைப்பீட மாணவி பார்கவி காந்திநாதன்  தெரிவுசெய்யப்பட்டிருந்தார் உறுப்பினர்களாக கமலரூபன், கலைச்செல்வி ஆகியோரும்,  மற்றும் தமிழ் சங்கத்தினுடைய செயலாளராக மேகலா கமலேஸ்வரனும் சங்க உறுப்பினர்களாக ஐஸ்வர்யலட்சுமிதேவி,  துஷானி  ஆகியோரும் கலைப்பீடத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களாவர்.

 பல எதிர்பர்ப்புக்களைச் சுமந்துள்ள சமூகத்தில் இவர்களின் பணி நிறைவானதாக அமையவும் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் செயற்பாடுகள் சிறந்தோங்கவும்  தமிழ்க் கலைப்பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் இவர்களை வாழ்த்தி நிற்கின்றோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites