திங்கள், 17 அக்டோபர், 2011

Sociology Exam Papers



கொழும்புப் பல்கலைக்கழகம் - இலங்கை

மூன்றாம்வருடக்கலைமாணிப் பரீட்சை  -2011

3246 சமகாலச் சமூகவிவகாரங்கள்

 நேரம் 02 மணித்தியாலம்

 முன்று(03)வினாக்களுக்கு விடை தருக.

1.சமூகவியல் அணுகுமுறையின் மூலமாகச் சமூகவிவகாரங்களைக் கற்பதன் முக்கியத்துவத்தினை உதாரணங்களோடு பரிசீலிக்குக.


2.பொருத்தமான கோட்பாட்டு அணுகுமுறைகளோடு தொடர்புபடுத்தி வறுமைக்கான காரணங்களை விமர்சனரீதியாகப் பரிசீலிக்குக.




3.இலங்கைச் சமூகத்தில் தற்கொலை ஒரு சமூகப்பிரச்சினையாகத் தோற்றம் பெறுவதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளைப் பரிசீலிக்குக.


4."சூழல் குழப்ப நிலையும் ஒரு சமூக விவகாரமே (Environmental crisis)" நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? விமர்சன ரீதியாகக் கருத்துரைக்குக.


5. பொருத்தமான கோட்பாட்டு அணுகுமுறைகளுக்கு விசேட முக்கியத்துவம் வழங்கிப் போதைப் பொருள் துஸ்பிரயோகத்தில் செல்வாக்குச் செலுத்தும் கட்டமைப்பு ரீதியான சமூக மற்றும் பண்பாட்டுக் காரணிகளை விமர்சனரீதியாகப் பரிசீலிக்குக.


6. கீழ் வருவனவற்றுள் எவையேனும் மூன்றினைப் பற்றிச்சிறுகுறிப்பு எழுதுக.

(அ) பல்வேறு வகையான சமூக விவகாரங்கள்

(ஆ) சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத நடத்தை மற்றும் உடன்பாடற்ற நடத்தை

(இ) சமூக விவகாரங்களைப் புரிந்து கொள்வதில் அடையாள இடைவினைவாதத்தின் முக்கியத்துவம்

(ஈ) ஒரு சமூக விவகாரமாகத் தன்னினச்சேர்க்கை

(உ) ஒரு சமூக விவகாரமாக வியாபாரப்பாலியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites