வியாழன், 6 அக்டோபர், 2011

Geography Exam Papers

கொழும்புப் பல்கலைக்கழகம் - இலங்கை

பொதுக்கலைமாணிப் பரீட்சை (புவியியல்)

இரண்டாம் அரையாண்டுப் பருவப் பரீட்சை 2011

GYG -3243 அபிவிருத்தியில் பிரதேசப்பாங்குகள்

நேரம் 02 மணித்தியாலம்

ஒவ்வொரு பகுதியிலும் குறைந்த பட்சம் ஒரு வினாவையேனும் தெரிவு செய்து செய்து எல்லாமாக முன்று(03)வினாக்களுக்கு விடை தருக.

இரண்டு உலக புற உருவப்படங்கள் மற்றும் பிறேசில் நெதர்லாந்துப் படங்கள் வழங்கப்படும்.

பகுதி 01

(01) “தற்பொழுது பிறேசிலின் பொருளாதாரம் பாரிய உலகப் பொருளாதாரத்தில் 7வது இடத்தை வகிக்கின்றது.வெளிநாட்டு நேரடி முதலீடுகளே இதில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாகும்” இக்கூற்றினை நுணகிப் பரிசீலிக்குக.

                                                                                                                 (20 புள்ளிகள்)


(02) நெதர்லாந்துப் பொருளாதார ஸ்திரத்தன்மையினை நிலச்சீர்படுத்தல் திட்டங்கள் எவ்வாறு பாதித்துள்ளன என்பதனை உதாரணங்களுடன் விளக்குக

                                                                                                                 (20 புள்ளிகள்)

பகுதி 02

    (03)      (அ)   புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி நோக்குகளை(Millennium Development Goals)சுருக்கமாகக் குறிப்பிடுக.

                                                                                                                  (10 புள்ளிகள்)

(ஆ)  புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி நோக்குகளை அடைய முற்படும் போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் தடைகளை நுணகி மதிப்பிடுக

                                                                                                                   (10புள்ளிகள்)

(04)“உலகமயமாதல் செயன்முறைக்கு இசைவாக செயற்படாமல் வளர்முக நாடுகள் பொருளாதார அபிவிருத்தியை அடைவது கடினமாகும்”இக்கூற்றினை நுணகி மதிப்பிடுக
                                                                                                                    (20 புள்ளிகள்)

பகுதி 03

(05)     கீழே தரப்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் ஆசிய நாடுகளின் அபிவிருத்தியினை எவ்வாறு பாதிக்கின்றன என்பதனை உதாரணங்களுடன் ஆராய்க

1.புவிநடுக்கம்       (Earthquakes)

2.அயனச்சூறாவளிகள்   (Tropical Cyclones)

3.வரட்சி                 (Drought)
                                                                                                                    (20 புள்ளிகள்)


    (06)    (அ) “குடிப்புள்ளியியல் நிலைமாறல் மாதிரி”என்பதன்மூலம் கருதப்படுவது யாது என்பதனை சுருக்கமாக குறிப்பிடுக.

                                                                                                                       (05 புள்ளிகள்)

(ஆ) குடிப்புள்ளியியல் நிலைமாறல் மாதிரி தொடர்பாக உள்ள விமர்சனங்களை பொருத்தமான உதாரணங்களுடன் விளக்குக.

                                                                                                                      (15 புள்ளிகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites