
கொழும்புப் பல்கலைக்கழகம் இலங்கை
கலைப்பீடம்
முதலாம் வருடக் கலைமாணிப் பரீட்சை பருவம் - 2, 2011
INR - 1204- சர்வதேச உறவுகளின் நடைமுறை
இரண்டு (02) மணித்தியாலங்கள்
நான்கு (04) வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
01. போரின் இடைக்காலத்தில் (1918 - 1939) சர்வதேச அரசியல் முறைமையில் காணப்பட்ட முனைப்பான அம்சங்கள் யாவை?
02. 1945 - 1970 காலத்தில் வல்லரசுக்கிடையிலான இடைத்தொடர்புகளின் (Interactions) இயல்புகளைப் பரிசீலிக்குக?
03. எல்லா வினாக்களுக்கும் விடையளிக்குக.
1. எதிர்முக நடு நிலமையை (Negative Neutralism) நேர்முக நடு நிலமையுடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக?
2.அணிசேரா இயக்கத்தின் ஐந்து ஸ்தாபகர்களையும் அவர்களது நாடுகளையும் பட்டியலிடுக.
3.பஞ்சசீலக் கொள்கையை சுருக்கமாக விபரிக்குக.
04. எல்லா வினாக்களுக்கும் விடையளிக்குக.
1.பறக்கும் வாத்துக்களின் (Flying Geese) முதலாவது மற்றும் இரண்டாவது காலங்களில் ஜப்பானின் அதிகாரப் பயன் பாட்டை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக.
2.நான்கு ஆசிய வேங்கைகளின் (Four Asian Dragons) பிரதான பண்புகளை விபரிக்கவும்.
05.மத்திய கிழக்கு மோதல்களில் பனிப்போரின் தாக்கம் குறித்து கட்டுரையொன்றினை வரைக.
06. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினை ஓர் அரச சார்பற்ற செயற்பாட்டாளர் என்ற வகையில் பரிசீலிக்குக.
07 . ஒன்றில்
மிஹாயில் கொர்பசொவ் (Mikhail Gorbachev) பற்றி கட்டுரையொன்றினை வரைக.
அல்லது
ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசின் (USSR) உடைவுக்கான நீண்டகால மற்றும் குறுகய கால காரணங்களை பரிசீலிக்குக.
08. பின்வருவனவற்றுள் ஏதேனும் இரண்டு பற்றி சிறு குறிப்பு வரைக.
1. வோல்டர் லிப்மன் (Walter Lippman)
2. வியட்நாம் யுத்தம்
3.பரஸ்பரமான உறுதிப்படுத்தப்பட்ட அழிவு (Mutually Assured Destruction)
4.டென் சியாவோ பென்னின் நான்கு நவீனத்துவங்கள் (Deng Xiaoping)
5. உலகமயமாக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக