புதன், 19 அக்டோபர், 2011

Sociology Exam Papers,

 
 
கொழும்புப் பல்கலைக்கழகம் இலங்கை

கலைப்பீடம்

முதலாம் வருடக் கலைமாணிப் பரீட்சை பருவம் - 2, 2011

SOC - 1202   உளவியல் தத்துவங்கள்

இரண்டு (02) மணித்தியாலங்கள்
 
 
 
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை தருக. ஒவ்வொரு வினாவிற்கும் சமமான புள்ளிகள் வழங்கப்படும்
 
 
01. மனித நடத்தையினைக் கற்பதில் சமூகவியலுக்கம் உளவியலுக்கும் இடையேயான வேறுபாடுகள் எவை?
 
 
02.நடத்தையினைக் கற்பதில் பண்பாட்டினைக் கருத்தில் கொள்வது ஏன் அவசியமானது விளக்குக?
 
03. மனித நடத்தையினை விளக்குவதற்கு உந்துதல் தொடர்பான  உள்ளுணர்வுக் கோட்பாடு எவ்வாறு பயன்படுத்தப்படலாம்?
 
 
04. நீங்கள் இரவில் தனிமையாக இருக்கிறீர்கள். மின்சாரம் இல்லை வெளியே இடியும் மின்னலுமாக  இருக்கின்றபோது யாரோ உங்களது கதவினைத் திறக்க முயற்சிக்கின்றனர். இந் நிலமையினைப் புரிந்து கொள்வதற்கு ஜேம்ஸ்-லாங் கோட்பாடு மற்றும் கனென் -வாட் கோட்பாடு எவ்வாறு துணை புரியும்?
 
 
05. மணியோசையின் போது வாழைப்பழம் ஒன்றினை உண்பதற்குக் குரங்கு ஒன்றிற்கு எவ்வாறு கற்பிக்கலாம் விளக்குக?
 
 
06.எரிக்ஸனால் முன்வைக்கப்பட்ட உளச் சமூகப் படிநிலைகள் எவை?
 
 
07. புலணுணர்வு முறைமையின் செயற்பாடுகள் எவை? ஏதேனும் ஒரு செயற்பாட்டினைத் தெரிவு செய்து அச் செயற்பாடுபற்றி விரிவாக உதாரணங்களோடு விளக்குக.
 
 
08. கீழ் வருவனவற்றுள் எவையேனும் இரண்டினைப்பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.

1. செயற்பாட்டு நிபந்தனைப் படுத்தல்

2.நடத்தை வாதக் கோட்பாடு

3.மஸ்லோவின் உயர்தேவைக் கோட்பாடு

4.புரொய்ட்டின் உளப்பாலியல் விருத்தியின் படிமுறைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites