புதன், 19 அக்டோபர், 2011

Political Science Exam Papers,

கொழும்புப் பல்கலைக்கழகம் இலங்கை

கலைப்பீடம்

மூன்றாம் வருடக் கலைமாணிப் பரீட்சை பருவம் - 2, 2011

3252- ஒப்பீட்டு நோக்கிலான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகம்

இரண்டு (02) மணித்தியாலங்கள்



ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.


01. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் உள்நாட்டு பொருளாதாரத்தில்பூகோளமயமாக்கல் செயன் முறையானது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆராய்க.


02.பொதுக்கொள்கை மற்றும் பொதுத்துறை நிர்வாகம் என்பன அரச - மைய அபிவிருத்தி மற்றும் நலன்புரி அரசு என்பவற்றில் இருந்து குறைந்து செல்லும் நலன்புரி அரசை நோக்கி மாற்றமடைந்துள்ளன என நீர் கருதுகிறீரா? உமது விடையை உறுதிப்படுத்துக.



03.பொதுக் கொள்கை மற்றும் பொதுத்துறை நிர்வாகத்தின் பின்வரும் பரிமாணங்களை விளக்குக.

1. நலன்புரி அரசும் அபிவிருத்தி நிர்வாகமும்

2.பொதுத்துறை நிர்வாகத்திற்கான மக்கள் பங்கேற்பு அணுகுமுறை


04. பொதுக் கொள்கை மற்றும் பொதுத்துறை நிர்வாகம் என்பவற்றிற்கான  பின்வரும் அணுகுமுறைகளைப் பரிசீலிக்குக.

1.குறைவடைந்து செல்லும் அரசு

2.சேவை வழங்கலில் அரசதுறை மற்றும் சந்தை


05. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் " கட்டமைப்பு சீராக்கல் கொள்கை"   (SAP) என்பதனை விமர்சன ரீதியாக ஆராய்க

.
06. சுதந்திர காலம் தொடக்கம் இலங்கையின் பொதுக் கொள்கையாக்க செயன்முறைக்கம் இனத்துவ அல்லது அடையாள அடிப்படையிலான  முரண்பாட்டிற்கும் இடையிலான தொடர்பினை பரீட்சிக்குக.


07.பின்வருவனவற்றுள் ஏதேனும் மூன்றிற்கு (03) சிறு குறிப்புக்கள் எழுதுக.

1. கலப்பு பொருளாதார முறைமை

2.மத்திய திட்டமிடல் முறைமை

3.தலையிடா கொள்கை

4.தனியாள் மயமாக்கல்

5.நலன்புரிமயமாக்கல் குறைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites