புதன், 12 அக்டோபர், 2011

International Relations Exam Papers




கொழும்புப் பல்கலைக்கழகம்,இலங்கை
கலைப் பீடம்
வருடக் கலைமாணிப்பரீட்சை, பருவம்  -2011
INR 3267 - இலங்கையின் வெளிநாட்டு கொள்கை : 1977 இன் பின்னர்
இரண்டு (02) மணித்தியாலங்கள்

முதலாம் வினாவுக்கும் ஏனையவற்றுள் இரண்டு (02) வினாக்களுக்கும் விடைதருக.

1 .வெளிநாட்டுக் கொள்கையின் கோட்பாடு மாதிரிகள், வரையறைகள் மற்றும் எண்ணக்கருக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி 1977 இன் பின்னர் இலங்கையின் ஏதேனும் இரண்டு அம்சங்களின் வெளிநாட்டுக் கொள்கை நடவடிக்கைகளைப் பரிசீலனை செய்க.




2 . ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசின் இருதரப்பு உறவுகளைப் பின்வரும் துறைகளில் ஆராய்க.

      I.         1980 இல் இலங்கை-அமெரிக்க உறவுகள்

    II.        1980 இல் இலங்கை -இந்திய உறவுகள்



3. "வெளிநாட்டு விவகாரங்களில் மக்கள் சார்ந்த (people centered ) அணுகுமுறையைப் பின்பற்றுதல் ஜனாதிபதி பிரேமதாசாவின் வெளிநாட்டுக் கொள்கையின் பாண்பாகும்" பரிசீலனை செய்க.



4 . "சர்வதேச தீவிரவாதத்தை முறியடிப்பதற்கு திடமான நிலைப்பா டொன்றினைக் கடைப்பிடித்தல்,லக்ஸ்மன் கதிர்காமரின் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு முக்கிய பண்பாகும்." ஆராய்க.



5.  2005 இன் பின்னரான காலத்தில் மகிந்த ராஜபக்சவில் அரசாங்கத்தின் வெளிவாரி அச்சுறுத்தல்கள் மற்றும் வெளிநாட்டுக்கொள்கைகள் பற்றிய  பதிலிருப்புக்கள்(Responses ) பற்றிக் கட்டுரை ஒன்றினை எழுதுக.



6.பின்வருவனவற்றில் ஏதேனும் மூன்று (3) பற்றிச்சிறு குறிப்பு வரைக.

I.        1947 - 1977 காலத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைத் தீர்மானம் எடுத்தல் தொடர்பான அரசியல் அமைப்பு நிறைவேற்று அதிகாரங்கள்.

II.        வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் வகிபங்கு.

III.        1980 களில் சார்க் அமைப்பிற்கான இலங்கையின் பங்களிப்பு.

IV.        1980 களில் சனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்த்தனவின் கீழ் சீன மற்றும் ஜப்பானுடனான இலங்கை உறவுகள்.

V.        சர்வதேச தீவிரவாதம் குறித்த இலங்கையின் கொள்கை நிலைப்பாடு.

VI.        இந்திய- இலங்கை  சமாதானஉடன்படிக்கை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites